Categories
மாநில செய்திகள்

12-ம் வகுப்பில் விடைத்தாள் மறுமதிப்பீடு….. 1,500 மாணவர்களுக்கு மதிப்பெண்களில் மாற்றம்….!!!!

12 ஆம் வகுப்பில் விடைத்தாள் மறு கூட்டல் மறு மதிப்பீட்டிற்கு 4000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 1500 பேரின் மதிப்பெண் மாற்றி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு ஜூன் மாதம் பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெளியானது. பொது தேர்வு முடிவுகளுக்கு பின்னர் 11, 12 வகுப்பு மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

இதில் விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்யப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த மறு கூட்டலுக்கு 12ஆம் வகுப்பு மாணவர்கள் 4000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 1500 பேரின் மதிப்பெண் மாறி இருப்பதாகவும், அதிக அளவில் மதிப்பெண்கள் கூடி இருப்பதாகவும் தேர்வு துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |