Categories
மாநில செய்திகள்

12 ம் வகுப்பு மாணவர்களுக்கு…. தேர்வுத் துறையின் முக்கிய அறிவிப்பு..!!

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் தேர்வுத்துறை இணையத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும தமிழகத்தில் 9, 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு பொது தேர்வுக்கு தயார்படுத்த முடிவு செய்தது.

இந்நிலையில் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியலில் தேர்வு துறை இணையதளத்தில் திங்கட்கிழமை வெளியாகும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் பெயர் விவரங்களை சரிபார்க்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் மே 3-ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 வரை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது. இதற்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |