Categories
மாநில செய்திகள்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு எப்போது?…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி  வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை துணைத் தேர்தல் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 6 முதல் 10-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்க தேவையில்லை. மேலும் இது பற்றிய விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |