Categories
ஆன்மிகம் இந்து

12 ராசிக்காரர்களுக்கும்… பொருத்தமான அதிர்ஷ்ட கல் எவை என்று தெரியுமா…? அப்ப இத படிங்க…!!!

ஒரு மனிதனின் முயற்சியால் கிடைக்காதது ஒன்றுமில்லை. நமது வாழ்க்கைக்கு எது தேவையோ அதை கண்டறிந்து நல்ல தீர்மானத்தோடு செயல்படும் போது நிச்சயம் அது வெற்றிக்கு வழிவகுக்கும்.

ரத்தினங்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் மாற்றங்களும், பலன்களும் கிடைக்கப்பெறுவதை உணரலாம். ரத்தினக் கற்களால் ஏற்படும் அதிசக்தி வாய்ந்த உந்து சக்தி, மனிதருக்கு உடலளவிலும், மனதளவிலும் பலன்களை கொடுக்கிறது. தீய எண்ணங்களை அகற்றி, நேர்மறையான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பதாக நம்பப்படுகிறது.

வரலாற்று சுவடுகளில் காலம் காலமாக ரத்தினங்கள் மீதான பார்வையும், அதன் மீதான ஈர்ப்பும் விசித்திரம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. பண்டைய காலகட்டங்களில், மாபெரும் அரசுகளை கட்டமைத்து, கல்வி, அறிவு, ஞானம், செல்வம் என அனைத்திலும் வெற்றி கண்ட பலரும் ரத்தினங்களை பயன்படுத்தியவர்கள்தான் என்ற கூற்று உள்ளது. உதாரணமாக மாவீரன் அலெக்சாண்டர் தன்னுடைய, மோதிரம், அணிகலன், போர் வாள் என அனைத்திலும் ரத்தினம் பயன்படுத்தி அதன் பலனை முழுமையாக அடைந்ததாக கூறப்படுகிறது.

வாழ்க்கையில், எல்லா மனிதர்களுக்கும் கனவும், ஆசைகள் உண்டு. அதற்காக முயற்சிக்கும்போது தடைகளும், கஷ்டங்களும் ஏற்படுவது வாடிக்கை. அவற்றில் இருக்கும் பிரச்னைகள் விலகி, நினைத்த காரியம் கைகூட பல வழிகளும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ரத்தின யோகம்.

ரத்தினக் கற்களின் நன்மைகள்: –

உடல் மற்றும் மனரீதியாக உருவாகும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது, அதனை தொடரச் செய்கிறது. நேர்மறையான வழியில் சிந்திக்கவும் செயல்படவும் வழிவகுக்கிறது. ரத்தினங்களை தேர்வு செய்வதன் மூலம் தடைகள் நீக்கப்பட்டு, கிரக நிலைக்கு ஏற்ப தீமைகள் அகற்றப்படுகின்றன.

துக்கம், விரக்தி மற்றும் பிற கஷ்டங்களை அனுபவிக்கும் ஒரு நபர் வாழ்க்கையில் எதையும் வெற்றிபெற முடியாது. அத்தகையவர்கள் சோம்பேறிகளாக பார்க்கப்படுகிறார்கள். ஆரோக்கியமான காலங்களில் நேர்மறையாக சிந்திக்கவும் கடினமாக உழைக்கவும் அவசியம் இருக்கிறது.

கிரக நிலையை சரிபார்த்து, சாதகமான கிரகங்களைக் கண்டறிந்து, புரிதலுக்கு ஏற்ப அதன் கற்கள் அணிவதன் மூலம் நிச்சயமாக வெற்றிபெற முடியும் என்கின்றனர் ஜோதிட சாஸ்திரவியலாளர்கள்.

ராசிக்காரர்கள் அணிய வேண்டிய ராசிக்கல்: –

மேஷம் – பவளம்
ரிஷபம் – வைரம்
மிதுனம் – மரகதம்
கடகம் – முத்து
சிம்மம் – மாணிக்கம்
கன்னி – மரகதம்
துலாம் – வைரம்
விருச்சிகம் – பவளம்
தனுசு – கனக புஷ்பராகம்
மகரம் – நீலக்கல்
கும்பம் – நீலக்கல்
மீனம் – கனக புஷ்பராகம்

Categories

Tech |