Categories
தேசிய செய்திகள்

12 வயது சிறுமி எரித்து கொலை… காம கொடூரர்களின் வெறிச்செயல்… அதிர்ச்சி…!!!

பீகாரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதமாக பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் பீகாரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 12 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியூரில் கூலித் தொழிலாளியாக தந்தை வேலை செய்துவரும் நிலையில், வீட்டுக்குள் புகுந்த அதே கிராமத்தை சேர்ந்த 4 பேர் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தடயங்கள் தெரியாமலிருக்க சிறுமியை அறைக்குள் வைத்து பூட்டி தீ வைத்துள்ளனர். ஜனவரி 3 ஆம் தேதி நடந்த கொடும் செயலில் ஈடுபட்ட அந்த நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Categories

Tech |