நவம்பர் 15ஆம் தேதி உலகின் மொத்த ஜனத்தொகை 800 கோடியை எட்டு விடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 700 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரிக்க 12 வருடங்கள் எடுத்துள்ளது. உலக மக்கள் தொகை 794 கோடியாக உள்ளது. இது வரும் நவம்பர் 15 ஆம் தேதி 800 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் துல்லியமாக எட்டும் என உறுதியாக கூற முடியாது. வரும் 2030ல் உலக மக்கள் தொகை 970 கோடியை எட்டும்.
இது 2080ல் 1040 கோடியாக உயரும். 2100ம் ஆண்டு வரை மக்கள் தொகையில் மாற்றம் இருக்காது. ஆனால் மொத்த ஜனத்தொகை அதிகரிக்கும் வேகம் கணிசமாக குறைந்துள்ளதால் 900 கோடியை எட்ட இன்னும் 15 வருடங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா உலக அளவில் 139.34 கோடி ஜனத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.