திருத்தணி ஒன்றியம் வி.கே.ஆர்.புரம் காலனியில் வசிப்பவர் பாலாஜி. இவருடைய மனைவி குபேந்திரி. இவர் 2008 ஆம் வருடம் திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை பிறந்தது. அப்போது அறுவை சிகிச்சை செய்த பெண் மருத்துவர் ஒருவர் கவனக்குறைவின் காரணமாக கத்திரிக்கோலை வயிற்றில் உள்ளே வைத்து தைத்துள்ளார்.
இதனையடுத்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு குபேந்திரிக்கி தாங்க முடியாத வயிறு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சென்று ஸ்க்கென் செய்து பார்த்தபோது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது கண்டறிந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து குபேந்திரியின் கணவர் பாலாஜி மனித உரிமை ஆணையத்தின் புகார் அளித்ததையடுத்து புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம் குபேந்திரிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.