Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

12 வருஷமா வேலை செய்யுறோம்…. “பணி நிரந்தரமாக்குங்க”…. ஊழியர்கள் போராட்டத்தால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு..!!

தொகுப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

கடலூர் மாவட்டத்தில்  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொகுப்பூதிய ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 12 வருடங்களாக 205 பேர் தொகுப்பூதிய ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 2010 -ஆம் வருடம் ரூ 1500 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்கள். இவர்களுக்கு தற்சமயம் ரூ 5,000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த 2012ஆம் வருடம் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. இந்த நிலையில் கடந்த 12 வருடங்களாக பல துறைகளில் தொகுப்பூதிய ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்ற 205 பேருக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனால் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரி 100-க்கும் அதிகமான தொகுப்பூதிய ஊழியர்கள் நேற்று காலை போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து துணை வேந்தர் வராததால் பல்கலைக்கழக பதிவாளர் சீதாராமன் தொகுப்பூதிய ஊழியர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து தொகுப்பூதிய ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இதனால் அந்த பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |