கேரளா மாநிலத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதனை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் தேதியான பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி இந்த 6 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழ் சமூகங்களிடையே உலகம் கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14-ஆம் தேதி நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.