நியூசிலாந்தில் 12லிருந்து 15 வயதுடைய குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த இடைக்கால ஒப்புதல் அளித்துள்ளது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், 12லிருந்து 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு Pfizer/BioNTech தடுப்பூசிகள் 16 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன் பின்பு கடந்த ஏப்ரல் மாதத்தில், 12-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனை செய்யப்பட்டதில் 100% திறன் கொண்டிருந்தது. இதனையடுத்து நியூசிலாந்தின் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பாதுகாப்பு ஆணையமான Medsafe, இந்த ஆராய்ச்சியில் பெறப்பட்ட தகவல்களை பரிசீலித்த பின்பு தடுப்பூசி செலுத்த இடைக்கால ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் குறிப்பிட்ட இந்த வயது வரம்பில் சுமார் 2,65,000 குழந்தைகள் உள்ளார்கள். அவர்களுக்கு தேவையான அளவில் தடுப்பூசி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் Medsafe தீர்மானத்தை வைத்து சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனை, இந்த மாத கடைசியில் அரசால் ஆய்வு செய்யப்பட்ட பின்பே முடிவு செய்யப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். எனவே தீர்மானம் கிடைக்கும் வரை குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.