Categories
தேசிய செய்திகள்

12-18 வயதினருக்கு…. கோர்பேவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி…. வெளியான தகவல்..!!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி புரதம் துணைப்பிரிவு கோர்பேவேக்ஸ் என்ற தடுப்பூசியை மத்திய மருந்துக்கு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி புரதம் துணைப்பிரிவு கொரோனா தடுப்பூசியாக கோர்பேவேக்ஸ் உள்ளது. இந்த தடுப்பூசியை  பயாலாஜிக்கல் ஈ  என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதற்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் கொரோனாக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்க வல்லது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இதனால் நடப்பு கொரோனா மற்றும் பரவலான தடுப்பூசி பயன்பாட்டை கருத்தில் கொண்டு 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவேக்ஸ் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று பயாலாஜிக்கல் நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில் கோர்பேவேக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

Categories

Tech |