நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 12.85 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 10,28,203 ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கி உள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாம் இடத்திலும், ஆந்திரா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 12,85,8,389 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 10,28,203 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.