12 – ஆம் வகுப்பு மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் பகுதியில் தமிழ்வேந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் தமிழ்வேந்தன் கடந்த 8 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் வள்ளி வடுதாவடி பகுதியில் வசிக்கும் தனது அக்கா லட்சுமி வீட்டிற்கு இரண்டு மகள்களுடன் வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர்.
அதன்பின் மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும்போது வள்ளியின் மூத்த மகளான கனிமொழி காணாமல் போனதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அவரது குடும்பத்தினர் கனிமொழியை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் உடையாளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.