ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான சேவை நிறுவனமானது, 12 A350-1000 ஏர்பஸ் விமானங்களை வாங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசாங்கமானது, தொலைதூரத்தில் பயணங்கள் செய்வதற்காக 12 ஏர்பஸ் விமானங்களை வாங்க தயாராகிறது. வரும் 2025ம் வருட கடைசியில் சிட்னியிலிருந்து லண்டன் வரை 20 மணி நேரத்தில் 10 ஆயிரம் கிமீ தொலைவிற்கு இடைவிடாமல் செல்லக்கூடிய விமான சேவை அறிமுகமாகவிருக்கிறது.
இதற்கென்று குவாண்டஸ் நிறுவனமானது, நெதர்லாந்து நாட்டின் Airbus SE நிறுவனத்திடம் 33,600 கோடி ரூபாய்க்கு 12 வகை A350-1000 விமானங்களை வாங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.