துபாயில் நடந்த விபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஓமன் நாட்டில் நடைபெற்ற ஈத் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு துபாய் நோக்கி 31 பேருடன் சென்று கொண்டு இருந்த பேருந்து அங்குள்ள மெட்ரோ நிலையம் அருகே திடீரென விபத்திற்குள்ளானது.இந்த விபத்தில் இந்தியர்கள் 12 பேருடன் சேர்த்து 17 பேர் உயிரிழந்துள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயரக்கூடுமென்றும் சொல்லப்பட்ட நிலையில் சிலரின் உடல்களின் அடையாளத்தை காண முடியவில்லை , காயமடைந்த இந்தியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்தவர்களில் 8 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
With great sadness we inform that Indian fatalities in Dubai bus accident has gone up to 12. Our officers are at Rashidiya police station and mortuary to extend all assistance. Our effort now is to get formalities completed soon so that mortal remains can be repatriated soon. pic.twitter.com/ai3mbesBDl
— vipul (@vipulifs) June 7, 2019