சீனாவில் உள்ள ஷியான் நகரில் திடீரென எரிவாயு குழாய் பயங்கரமாக வெடித்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் சீனாவில் உள்ள ஷியான் நகர் குடியிருப்பு பகுதியில் எரிவாய் குழாய் ஒன்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குழாய் பயங்கரமாக வெடித்துள்ளது. இதனால் அங்குள்ள பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்ததில் 12 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 138 பேர் இடிபாடுகளில் சிக்கியதில் அவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அதிலும் 37 பேருடைய நிலைமை மருத்துவமனைகளில் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உள்ளூர் செய்தி நிறுவனங்கள், ஷியான் நகர மருத்துவமனைகள் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செலுத்த முன்வருமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.