Categories
தேசிய செய்திகள்

12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதத்துக்கான வங்கி விடுமுறை நாட்களை அனைத்து வங்கிகளுக்கும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதத்துக்கான விடுமுறை நாட்களை கொண்ட பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது ஆகும். பொதுவாக வங்கிகளுக்கு பண்டிகை கால விடுமுறைகள், ஞாயிற்றுக்கிழமைகள், 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த அடைப்படையில் அடுத்த மாதத்தில் பண்டிகைக்கால விடுமுறைகள், ஞாயிற்றுக் கிழமைகள், 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் மொத்தம் 16 நாட்கள் விடுமுறை என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. இந்த 16 நாட்கள் அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள சில விடுமுறை நாட்கள் சிறப்பு பண்டிகைகளை முன்னிட்டு குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

அதன்படி ஜனவரி 12-ம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும். தமிழகத்தில் பொங்கல், தைப்பூசம் மற்றும் பொது விடுமுறை என மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதேபோன்று ஜனவரி 2, ஜனவரி 9, ஜனவரி 16, ஜனவரி 23, ஜனவரி 30 போன்ற ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் ஜனவரி 8, ஜனவரி 22 ஆகிய 2-வது, 4-வது சனிக்கிழமைகள் போன்ற தினங்களில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்

Categories

Tech |