Categories
அரசியல் மாநில செய்திகள்

”சட்ட பேரவையில் புதிய அறிவிப்புகள்” அமைச்சர்கள் அதிரடி …..!!

இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் 12 புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளில் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் செயல்படுத்த தலா 8 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு ரூபாய் 2 கோடி செலவில் பயிற்சிகள் அளிக்கப்படும்.

காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் வகையிலான திட்டத்தை உருவாக்க ரூபாய் 3.32 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சுற்றுப்புற காற்றின் தன்மையை கண்காணிக்கும் திறனை அதிகரிக்க சேலத்தில் 2.5 கோடியில் நடமாடும் கண்காணிப்பு ஆய்வகம் அமைக்கப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தகவலுக்காக 300 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 15 கோடியில் திரவப் படிக காட்சிப்படுத்தும் கருவி வழங்கப்படும்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள சின்ன ஏரியை சூழல் மறுசீரமைப்பு செய்ய ரூபாய் 3.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்திற்கு பசுமை விருது வழங்கப்படும்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சிறப்பாக பணியாற்றும் சுற்றுச்சூழல் ஆய்வகம் தேர்வு செய்யப்பட்டு பசுமை விருது வழங்கப்படும்.

திரவ ,திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயலாற்றும்  நகர்புற, ஊராட்சி அமைப்புகளுக்கு பசுமை விருது வழங்கப்படும்.

பாலாற்றில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேலூரை தலைமையிடமாக கொண்டு ரூபாய் 50 லட்சம் செலவில் பறக்கும்படை ஏற்படுத்தப்படும்.

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தலா 1.20 லட்சம் மதிப்பில் நெகிழி பயன்பாடு ஒழிப்பு பிரச்சாரம் நடத்தப்படும்.

தேசிய பசுமை படை சூழல் மன்ற மாணவ மாணவிகளை சுற்றுலா அழைத்து செல்ல 37 மாவட்டங்களில் தலா 1.5 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

பல்லுயிர் பாதுகாப்பு மாசினை தடுத்தல் குறித்த கருத்தரங்குகள் , கருத்துப்பட்டறைகள் நடத்த ரூபாய் 1  நிதி ஒதுக்கீடு

வனத்துறையில் 4 புதிய அறிவிப்புகள் : 

அதே போல வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 4 புதிய அறிவிப்புகளை அறிவித்தார்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி அருகே 3 கோடி செலவில் பாரம்பரிய மற்றும் பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்.

தமிழ்நாடு வனத்துறையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த கட்டடங்களை மறுசீரமைப்பு செய்ய ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழகத்தில் உள்ள அனைத்து புலிகள் காப்பகங்களுக்கும்  வேட்டை தடுப்பு காவலர்களுக்கான  போக்குவரத்து முகாம் அமைக்கப்படும் .

4 புலிகள் காப்பகங்களில் தலா 1 வீதம் 4 போக்குவரத்து முகாம்கள் ரூ.6 கோடியில் அமைக்கப்படும்.

சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் கலைநயமிக்க கருத்து விளக்கத்துடன் கூடிய சிறு கூட்ட அரங்கம் அமைக்கப்படும்.

Categories

Tech |