இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு நீரழிவு என்னும் சர்க்கரை நோய் இருப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
புற்றுநோய் போல் விரைந்து தாக்கி அளிக்காத நோயாக நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் கருதப்படுகிறது. உடலின் ஒவ்வொரு உறுப்பையும் செயலிழக்க செய்யும் சர்க்கரை வியாதி உள்ளிருந்தே கொல்லும் என்பது மருத்துவர்களின் கூற்றாகும். 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் சர்க்கரை நோய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகளை நேற்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆண்களுடன் பெண்களுக்கும் சம அளவில் சர்க்கரை நோய் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியர்களில் 12 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் 50 வயதைக் கடந்தவர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.