உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் தற்போது வரை சுமார் 12% நபர்கள் தான் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் மொத்தமாக சுமார் 93 கோடியே 20 லட்சம் நபர்கள் தான் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளார்கள். இந்த தகவல் ஜூன் 10ஆம் தேதி நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பாலானோர் தற்போது வரை தடுப்பூசி செலுத்தவில்லை என்பது நன்றாக தெரிகிறது.
இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 12% தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டார்கள். இதில் இஸ்ரேல் நாட்டில் தான் அதிக அளவில் 63.1% நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த இடத்தில் இருக்கும் கனடா 62.7% பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது.
இந்தியாவில் சுமார் 13.7% பேர் தடுப்பூசி எடுத்துள்ளனர். பிரிட்டனில் 62.7% மக்களும், அமெரிக்காவில் 51.4 % மக்களும் செலுத்தியுள்ளனர்.