Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்று நாள் எப்படி ? 12 இராசிக்கான இன்றைய (08/10/2019) பலன் ….!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் :

மேஷம் ராசி அன்பர்களே…!!  இன்று புதிய கலை பயிற்சிகளில் தேர்ச்சி ஏற்படும்.  சாதுரியமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் அல்லது வியாபாரம் மூலம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். சவால்களை திறமையுடன் எதிர்கொள்வீர்கள். பலரும் வியந்து பார்க்கின்ற நல்ல நிலை இன்றைக்கு ஏற்படும் தொழில் வியாபாரம் செழித்து வளரும். இன்று  பண வரவு கூடுதலாகவே கிடைக்கும் , சேமிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும்.

தொழில் வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாகவே பணிகளை செய்யும் படி இருக்கும். இன்று அனைவரின் ஆதரவையும் பெற்று முன்னேற்றமான சூழ்நிலையை  சந்திக்கக்கூடும் . இன்று நீங்கள் காலையில் எழுந்தவுடன் மகாலட்சுமி வழிபாட்டையும் மேற்கொண்டால் அனைத்து காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். நீங்கள் நினைத்ததும் நடக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்டமான  எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்டமான  நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

ரிஷபம் :

ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று வியாபார விரிவாக்கங்கள் வெற்றி பெற்று எதிர்பார்த்த பணம் வரவு வந்து சேரும். தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். மனசில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த விஷயத்தைப் பற்றி மட்டும் பேச வேண்டாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு அக்கறையுடன் இன்று பணிபுரிவது அவசியம். குடும்ப செலவு கொஞ்சம் கூடும். ஒவ்வாத உணவுகளை தயவுசெய்து உண்ண வேண்டாம். இன்று ஓரளவு சிறப்பான முன்னேற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கக் கூடும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர்வான எண்ணங்கள் இன்று இருக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். நட்பு உங்களை பாராட்டும் வகையில் இருக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பை கொடுக்கும். இருந்தாலும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள் , ஒவ்வாத உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கொடுக்கல் , வாங்கல் விஷயங்கள் இன்று ஏதும் வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். இன்றைய நாள்  உங்களுக்கு நல்லபடி முன்னேற்றத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விஷ்ணு பகவானை மனதார நினைத்து , விஷ்ணு பகவானுக்கு நீங்கள் அர்ச்சனை செய்து , இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் வெற்றியை கொடுப்பதாகவே இருக்கும். அதே போல நீங்கள் வெளியில் செல்லும்போது ஆரஞ்ச் நிற துண்டுகளை பயன்படுத்துவது நல்லது.. ஆரஞ்சு நிற கலரில் துண்டுகளை பாக்கெட்டில் வைத்து செல்லலாம். அப்படி செல்லும் போது உங்களுக்கு அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்டமான  நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்

மிதுனம் :

மிதுனம் ராசி அன்பர்களே…!!  இன்று வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கக்கூடும். குடும்பத்தில் தேவையற்ற பொருட்களை வாங்க வலியுறுத்துவார்கள். கூட்டாளியிடம் எச்சரிக்கையுடன் இருந்தால் ஏமாற்றத்தை நீங்கள் தவிர்க்கலாம். செயல்களில் நல்ல மாற்றத்தை பின்பற்றுவீர்கள். சூழ்நிலை அனுபவமாக அமைந்து உங்களுக்கு உதவிகளை செய்யும்.

தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டு ஆதாயம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று சிறப்பான செயல்கள் மூலம் எடுத்த காரியம் அனைத்தும் சாதகமாகவே நடந்து முடியும். இன்று மாணவர்கள் கல்விக்கான புதிய முயற்சியில் ஈடுபடுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.ஆகையால் கல்விக்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்டமான  எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

கடகம் :

கடக ராசி அன்பர்களே…!! இன்று புதிய தொழில் துவங்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாக கூடும். புதிய சேமிப்புகளில் முதலீடு செய்ய முனைவீர்கள். வலுவான உயர் அதிகாரிகளின் உதவியால் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். மனதில் உறுதியுடன் செயல்படுவீர்கள். தாமதம் ஏற்படுத்திய பணிகளில் சில இன்று நிறைவேறும். தொழில் அபிவிருத்தி காண பண வரவு கிடைக்கும். உறவினர்கள் இல்ல சுப நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடும். இன்று தற்காலிக பதவி உயர்வு , கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவதற்கான சூழல் இருக்குங்க. குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மன குழப்பங்கள் தீர்ந்து தெளிவு ஏற்படும்.

இன்றைய நாள் உங்களுக்கு தெளிவான சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து செல்லும். அவர்களின் நலனுக்காக இன்று நீங்கள் பாடுபடுவீர்கள். இன்று கல்விக்கான முயற்சியில் மேற்கொண்டால் அனைத்து காரியங்களும் சிறப்பாகவே இருக்கும். மனம் மகிழ்ச்சியாகவும் காணப்படும். அதே போல் இன்று நீங்கள் காலை எழுந்ததும் சூரிய பகவானை கையெடுத்துக் கும்பிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் ,  உங்கள் வாழ்க்கையை மேன்மேலும் உயர்த்திக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்டமான  எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்டமான  நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

சிம்மம் :

சிம்மம் ராசி அன்பர்களே….!! இன்று வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. மனைவி மக்களின் உடல் நிலையால் மருத்துவச் செலவுகள் கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். மேலதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் மேன்மை அடையலாம். சிலர் உதவுவது போல உங்களுக்கு பாசாங்கு காட்டக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பெருந்தன்மையுடன் நடந்து சுய கவுரவத்தை பாதுகாத்து கொள்வீர்கள். தொழிலில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது நல்லதுங்க. குறைந்த அளவில் பணவரவு இருக்கும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று திட்டமிட்டு காரியங்களை செய்ய வேண்டும். வெளியூர் பயணங்கள் செல்லலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்.

தந்தை மூலம் நன்மை ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவை நீங்கள் எடுக்கக்கூடும்.  மனதில் இருந்த வீண் கவலைகள் நீங்கும். இன்று ஓரளவு மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். கல்வியில் உங்களுக்கு எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுப்பதாக இருக்குங்க. கல்விக்கான புதிய முயற்சிகளை மேற்கொண்டால் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். அதே போல நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது பொன் நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்வது சிறப்பாக இருக்கும். எல்லா காரியங்களும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும். அதேபோல நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரத்தை வழிபட்டு தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்டமான  நிறம் : ஆரஞ்சு மற்றும் பொன்நிறம்

கன்னி :

கன்னி இராசி அன்பர்களே…..!! இன்று புதிய கூட்டாளி ஒருவர் உங்களுக்கு உதவிகளை செய்வதற்காக வருவார். அதன் மூலம் நீங்கள் லாபத்தையும் அடைவீர்கள். உங்களுடைய வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர்களுடன் நீங்கள் கைகோர்த்து முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். அரசு , அரசியல்வாதிகளின் ஆதரவு போன்றவை இருக்கும். அரசு அதிகாரமிக்க பதவிகள் தேடிவரும். மனதில் குழப்பமான சிந்தனை உருவாகி கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். நண்பரின் மதி நுட்பம் நிறைந்த ஆலோசனை உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். தொழில் இலக்கு தாமதமாகவே பூர்த்தியாகும். குடும்ப செலவு அதிகரிக்கும்.

இன்று அடுத்தவர் செய்யும் நற்காரியங்களை ஆதரிப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீன் கவலைகள் மட்டும் அவ்வப்போது வந்து செல்லும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாகவே நடந்து முடியும்.குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்பட்டு ஒற்றுமை இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் ஓரளவு நன்மை கொடுக்கும். கல்வி காண முயற்சிகள் இன்று நீங்கள் மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது நீல நிற கைகுட்டையை எடுத்து சொல்வது சிறப்பு. உங்களுக்கு அனைத்து  அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுக்கும். நீல நிற கைக்குட்டை பயன்படுத்தி உங்களுடைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்டமான நிறம் : நீலம் மற்றும் பச்சை

துலாம் :

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று பெண்களால் கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகன விபத்தை தடுக்க வேண்டி மெதுவாகச் செல்லுங்கள். உறவுகளிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முயலவும். நண்பர்களில் ஒருவர் மாறுபட்ட குணத்துடன் பேசக்கூடும். அதை  பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமை காப்பதால் மட்டுமே நட்பினை நீங்கள் பாதுகாக்க முடியும். தொழிலில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியிருக்கும். முக்கிய பணவரவு  கிடைக்க தாமதம் ஏற்படும். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு துணை நிற்கும்.

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் தடைகள் விலகி செல்லும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்களை பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக தொடர்பான அலைச்சல் குறையும். இன்று குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். ஒற்றுமையும் இருக்கும். நீங்கள் இன்று வெளியி டங்களுக்கு  செல்லும் போது நீல நிற கைக்குட்டையை  எடுத்துச் செல்வது சிறப்பு. அன்றைய நாளில் ஏற்படக் கூடிய காரியங்கள் வெற்றிகரமாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்டமான  எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்டமான  நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

விருச்சிகம் :

விருச்சிகம் ராசி நேயர்களே…!!  இன்று விருந்தினர்கள் வருகையால் இல்லத்தரசிகளுக்கு வேலை பளு  கொஞ்சம் கூடும். அரசு ஆதரவால் நன்மைகள் நடக்கும். தன்னம்பிக்கை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க கூடிய சூழல் இருக்கும். உறவினர்களின் உதவி உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். முக்கிய பணி ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து இன்று நீங்கள் கவலைப்படுவீர்கள். தேவையில்லாத கவலை எப்பொழுதுமே வேண்டாம். வீண் செலவு கொஞ்சம் குறையும். பயணங்கள் செல்ல நேரிடும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது சிவப்பு நிற கைகுட்டையை எடுத்து செல்லுங்கள். நீங்கள் செய்கின்ற காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். இன்று உங்களுக்கு பணவரவும் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை சிவப்பு நிற கைக்குட்டை பெற்றுக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்டமான  எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்டமான  நிறம் : ஊதா மற்றும் சிவப்பு நிறம்

தனுசு :

தனுசு ராசி அன்பர்களே…!!  இன்று தெய்வ சிந்தனையால் குடும்பத்தோடு பிடித்த பயணங்களுக்கு  சென்று மகிழ்வீர்கள். இறையருளால் குழந்தை பிறப்புக்கான வாய்ப்புகள் உருவாகும். கோவில் திருப்பணிகளில் ஈடுபடுவதால் உங்களுடைய புகழ் ஓங்கும். பொது இடங்களில் நிதானத்தில் பேசுவது நல்லது. தொழில் வியாபார நடைமுறை தாமதமாக இருக்கும். பணவரவை விட குடும்ப செலவு இன்று அதிகரிக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து கொள்ளுங்கள். அது தான் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. தாயின் ஆறுதல் வார்த்தை உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். இன்று உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்க கூடிய மனநிலை ஏற்படும்.

காரிய தடைகள் விலகி செல்லும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சில காரியங்களை செய்யும்போது செய்யலாமா வேண்டாமா என்ற யோசனை இருக்கும்.. பெரியோரிடம் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. நீங்கள் முக்கியமான பணிக்கு செல்வதாக இருந்தால் மஞ்சள் நிற கைக்குட்டை எடுத்து சென்றால்  அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். இன்று கல்விக்கான முயற்சியில் மேற்கொள்வது மிகவும் சிறப்பு.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்டமான  எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்டமான  நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

மகரம் :

மகரம் ராசி அன்பர்களே…!! இன்று கடன் கொடுத்தவர்கள் தொல்லைகள் கொஞ்சம் அதிகரிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால் குடும்பத்தில் நிம்மதி குறையும். கருத்துவேறுபாடுகள் வரக்கூடும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. மாறுபட்ட  சூழல் இன்று உருவாகக்கூடும். தொழில் வியாபாரத்தில் ஏற்படுகின்ற குளறுபடியை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. பிறர் பார்வையில் தெரியும் படி அதிகமாக செலவு செய்ய வேண்டாம். அதாவது பணத்தை எண்ண வேண்டாம். வாகனத்தில் மிதவேகத்தை  பின்பற்றவும். இன்று கடன் பிரச்சினைகள் கொஞ்சம் தொல்லைகள் அதிகம் கொடுக்கக் கூடும்.

அதை நீங்கள் கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி செயல்பட வேண்டும். பணவரவும் இருக்கும், ஆனால் அந்த வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் கொஞ்சம் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் யோசனை செய்து செயல்படுவது நல்லது. இன்றைக்கு நீங்கள் கருநீல கலரில் கைக்குட்டையை வைத்து கொள்வது நல்லது. செய்யக்கூடிய முக்கியமான காரியங்களுக்கு  இந்த கரு நீல கைகுட்டையை எடுத்து சென்றால் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட,மான  எண் :  1 மற்றும் 5

அதிர்ஷ்ட மான நிறம் : கருநீலம் மற்றும் மஞ்சள் நிறம்

கும்பம் :

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். கஷ்டங்கள் தீரும் நாளாக இருக்கும். காரியத் தடைகள் விலகி செல்லும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். வேதனைகளை சாதனைகளாக்கி இன்று நீங்கள் மாற்றுவீர்கள். சிலரது  தேவையற்ற விமர்சனம் உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கும். வாழ்வில் லட்சியங்களை உணர்ந்து பணிபுரிவது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேறுவதற்கு கூடுதலாக மூலதனம் தேவைப்படும். உணவு உண்பதில் கட்டுப்பாடு இருக்கட்டும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கொஞ்சம் ஏற்படலாம். ஆனால் அன்பு கூடும். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் ஓரளவு கலகலப்பு காணப்படும். இன்று நீங்கள் முக்கியமான வேலைகளுக்கு செல்லும் போது கருநீலநிற கைக்குட்டையை  எடுத்துச் சென்றால்  அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். இதனை நீங்கள் தயவு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல நீங்கள் காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை மனதார நினைத்தால் அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி செல்வ நிலை உயரும்.

இன்று உங்களுக்கு  அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்டமான  எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்டமான  நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

மீனம் :

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் மேல் வருமானத்திற்கான புதிய வழிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். தாராளமான பண வரவுகளால் குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். இனிய பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பரின் உதவியால் நன்மை பெறுவீர்கள். மனதில் இருந்த தயக்கம் விலகி செல்லும். தொழிலில் உற்பத்தி விற்பனை நன்றாகவே இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் பண வரவிற்கு எந்த குறைவும் இருக்காது. எதிர்பார்த்த பண வரவு இருந்தாலும் செலவுகளும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். வியாபாரம் தொடர்பாக நீங்கள் செலவுகளை செய்ய வேண்டியது இருக்கும். போட்டியில் தொல்லை தராமல் இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறைந்து காணப்படுவார்கள்.

உங்களுடைய திறமைகள் இன்று வெளிப்புறம் நாளாகவும் இருக்கும். உங்களுடைய திறமைக்கு பாராட்டுக்கள் இன்று கிடைக்கும். அனைவரின் ஆதரவையும் பெற்று இன்று நீங்கள் சமூகத்தில் மதிக்கப் படுவீர்கள். இன்று செல்வாக்குடன் திகழ்வீர்கள். அதேபோல முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற கைக்குட்டை வைத்துக்கொண்டு அந்த வேலையை செய்வது மிகவும் சிறப்பு. அந்த வேளையில் உங்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். உங்களுடைய செல்வ நிலையும் உயரும். வெள்ளை நிற கைக்குட்டையை இன்று நீங்கள் பயன்படுத்தினால் சிறப்பை நீங்கள்  பெற முடியும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்டமான  எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்டமான  நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |