நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் எவரிடமும் எந்த ரகசியத்தையும் பற்றியும் சொல்ல வேண்டாம். தொழிலில் உள்ள ரகசியத்தை பாதுகாப்பது மிகவும் சிறப்பு. இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகத் தான் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். தொழில் வளம் மேலோங்கும் நாளாக இருக்கும். எண்ணங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
இன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பது நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் கூடும். சொன்ன செல்ல நிறைவேற்றுவீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் கெட்டிக்காரராக செயல்படுவீர்கள். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் அம்மனை வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். நீங்கள் செய்கின்ற விஷயங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்
ரிஷபம் :
ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாக இருக்கும். உங்களுடைய நிதிநிலை இன்று உயரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டு இன்றைய நாள் வேலை செய்வது சிறப்பு. மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும். கல்வியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க கூடுதலாக தான் உழைக்க வேண்டியதாக இருக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு செலவு இருக்கும். இன்று உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி மறந்து செயல்படுவார். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாக இருக்கும்.
தாராள அளவில் பணவரவு இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை இன்று வாங்க கூடும். மனைவி அதிக அன்பு பாசம் கொள்வார். விரயங்கள் ஏற்படாமலிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். திட்டமிட்ட பயணங்களில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். நேற்றைய பணிகள் இன்றும் தொடரும். ஆலய வழிபாடு அமைதியை கொடுக்கும். இன்று பணம் வரவு அதிகரிக்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியங்களையும் சாதித்துக் காட்டுவீர்கள். இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்காக வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலனைக் கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற கைக்குட்டை பயன்படுத்துவது சிறப்பு. உங்களுக்கு அது வெற்றி வாய்ப்புகளை தேடி கொடுக்கும். அதே போல நீங்கள் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டுடன் எழுந்தால் மிகவும் சிறப்பு. அதாவது அன்றைய நாளை அம்மன் வழிபாட்டுடன் தொடங்குவது நீங்கள் செய்யக் கூடிய காரியங்களை சிறப்பானதாக்கி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்டமான எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
மிதுனம் :
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று மன உறுதியுடன் நேர்மை வழியில் நடைபுரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகிய குறையை சரி செய்வதால் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோக மாற்ற சிந்தனை உருவாகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கௌரவம் அந்தஸ்து உயரும் . தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.
ஆர்டரில் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது பச்சை நிற கைக்குட்டையை எடுத்து செல்வது சிறப்பு. அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே இருக்கும். அதே போல நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் சிவப்பு நிறம்
கடகம் :
கடகம் ராசி அன்பர்களே…!! இன்று முக்கியமான பணி நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் சச்சரவு ஏதும் பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவோடு இருக்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும். பேச்சில் இனிமை கூடும். இன்று புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் சுக சௌக்கியம் ஏற்படும்.
நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாக இருக்கும். ஆதாயம் கிடைக்கும் நாளாக இருக்கும். இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் சிறப்பாகவே முடியும். நினைத்தது நிறைவேறும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிற கைகுட்டையை எடுத்து செல்வது சிறப்பு. இந்த நிறம் உங்களுக்கு இன்று அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விஷ்ணு பகவானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்
சிம்மம் :
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம் பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகள் எளிதாகவே நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். விலகிய பணம் அனைத்துமே வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். இன்று மனக்கலக்கம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். நட்பு கொஞ்சம் பகையாக கூடும், பேசும்போது கவனமாக பேசுங்கள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். தொழில் கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. இ ன்று அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். பொறுப்புகள் கூடி வரும்.
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்திகரமான சூழல் இருக்கும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். இன்றைய நாள் நீங்கள் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். மனம் ஆனந்தமாக காணப்படும். பேசும்போது மட்டும் கவனம் பேசுங்கள்.கோபத்தை இன்று தவிர்த்து விடுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிற கைக்குட்டை எடுத்து செல்வது நல்லது. அனைத்து காரியங்களும் சிறப்பாகவே இருக்கும். அதே போல நீங்கள் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து விஷயங்களுக்கும் வெற்றி கிடைக்கும். உங்களுடைய செல்வ நிலை உயரும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்
கன்னி :
கன்னி ராசி அன்பர்களே…!! சிலர் உங்களிடம் பொறாமை கொள்ளக் கூடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உருவாகும். அதிகப் பால் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணவரவை விட செலவு இன்றைக்கு அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது மித வேகத்தில் செல்லுங்கள். இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாக இருக்கும் செல்லும் இடங்களில் சிந்தனை வளர்த்தால் சிறப்படைவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். இன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும்.
இன்று கடனுக்காக பொருட்களை அனுப்பும் பொழுது கவனமாக அனுப்புங்கள். எச்சரிக்கையும் இருக்கட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாகவே உழைக்க வேண்டியதாக இருக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். இன்று பணவரவு ஓரளவு இருக்கும். இந்த நாள் நீங்கள் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது பச்சை நிற கைக்குட்டை எடுத்துச் செல்வது சிறப்பு. இந்த பச்சை நிற கைக்குட்டை உங்களுக்கு செல்வத்தைக் கொடுக்கும். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போல நீங்கள் இன்று காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்
துலாம் :
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பக்குவமாக பேசி பாராட்டுகளைப் பெறும் நாளாக இருக்கும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்து சேரக் கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி செல்லும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று திடீர் கோபம் கொஞ்சம் ஏற்படக்கூடும், பார்த்துக்கொள்ளுங்கள். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருங்கள். இன்று கொஞ்சம் உழைப்பு வீணாக கூடும். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். இன்று நிகழ்வுகள் இனிதாகவே அமையும். தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சியும் கிடைக்கும். உபரி பண வருமானமும் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
அவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கக் கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஊதா நிறத்தில் கைக்குட்டை வைத்துக் கொள்வது சிறப்பு. உங்களுக்கு ஊதா நிறம் அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அதே போல வெற்றி வாய்ப்புகளை தேடி கொடுக்கும். அதே போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும். இன்றைய நாளை மகாலட்சுமி வழிபாடுடன் தொடங்கினால் வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : ஊதா மற்றும் நீல நிறம்
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே..!! இன்று உங்கள் செயல்களில் வசீகர மாற்றம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். உபரி பண வரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாளாகவும் இன்று இருக்கும் உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவார்கள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். இன்று மேல் அதிகாரிகளுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கொஞ்சம் இருக்கும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்கள் இன்று கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிற கைக்குட்டையை எடுத்து செல்வது சிறப்பு. அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதே போலவே இன்று நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும்.. வெற்றி வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று எதிர்மறையாக பேசுபவரிடம் விலகியிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஆரவாரத் தன்மை தவிர்க்கவும். பணவரவில் தாமதம் இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்ப உறுப்பினர்கள் கூடுதல் பாசத்துடன் நடந்து கொள்வார்கள். இன்று தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டியில் விலகிச்செல்லும். இன்று கெட்ட கனவுகள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பாராத இடமாற்றம் இருக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.
எதிர்பாராத பணம் கைக்கு வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். ஆனால் திடீர் பண நெருக்கடி கூட இன்று வரலாம். எதையும் சமாளிக்கும் திறமை இன்று இருக்கும். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவரிடம் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் பொறுமையை கையாளுவது மிகவும் சிறப்பு. குடும்பத்தாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும், அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போதும், முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போதும் ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் சென்றால் அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதேபோல நீங்கள் காலையில் எழுந்ததும் முருகனை மனமார நினைத்து முருகன் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்
மகரம் :
மகர ராசி அன்பர்களே..!! இன்று அவசர பணி உங்களுக்கு இருக்கும் அக்கம் பக்கத்தினர் உடன் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் உங்கள் அனுபவத்தை பாதுகாக்கவும். உங்களுடைய ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். இன்று வாகன பராமரிப்பும் இருக்கும். ஓய்வு நேரத்தில் இசை, பாடலை ரசியுங்கள் மனம் அப்போதுதான் அமைதியாக இருக்கும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். உற்றார் உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன் வருவார்கள். சுபகாரியம் கொஞ்சம் இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது தான். மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கக்கூடிய முடிவுகள் நன்மையை கொடுக்க கூடியதாக இருக்கும்.
பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். இன்று மனதில் தேவையில்லாத கவலை இருக்கும். அதையும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மற்றவரிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மனம் ஓரளவு மகிழ்ச்சியாக காணப்படும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது கருநீலத்தில் கைக்குட்டையை பயன்படுத்துவது சிறப்பு. உங்களுக்கு காரிய வெற்றி இருக்கும். செல்வம் அதிகரிக்கும் நாளாக இருக்கும் அதே போலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விஷ்ணு பகவானை மனதார நினைத்து விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரக்கூடும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்டமான எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்டமான நிறம் : கருநீலம் மற்றும் மஞ்சள் நிறம்
கும்பம் :
கும்பம் ராசி நேயர்களே..!! இன்று உங்களின் மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். எந்த காரியத்திலும் சமயோசிதமாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மனதில் நம்பிக்கை வளரும். உபரி பண வருமானம் வந்து சேரும். குடும்பத்தின் முக்கிய தேவையை இன்று நீங்கள் நிறைவேற்றுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். இடமாற்றம் மேன்மையை கொடுக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்து தகராறுகள் விலகிச்செல்லும். இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் மட்டும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பணம் வசூல் மட்டும் இன்று இருக்கும். வீண் அலைச்சல்கள் கொஞ்சம் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரிடும். அதனால் வீண் அலைச்சல் இருக்கும். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர்கள் பணியை செய்வது போன்றவை உங்களுக்கு இன்று தாராளமாக இருக்கும், அதனால் உடல் உழைப்பும் கொஞ்சம் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். குடும்பத்தாருடன் இன்று கலகலப்பாகவும் காண்பீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிற கைக்குட்டையை எடுத்து செல்வது சிறப்பு. அனைத்து காரியங்களும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதை போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் முருகன் வழிபாட்டுடன் இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்
மீனம் :
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மீது பலரும் நல்ல எண்ணம் கொள்வார்கள். இதனால் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில் வியாபாரத்தில் உருவான குறுக்கீடு விலகிச்செல்லும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். யோகமான நாளாக இருக்கும். இன்று நிதி நிலையும் உயரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடித்துக் காட்டுவீர்கள். பக்குவமாக பேசி பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாக இருக்கும். உங்களுடைய இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை இன்று நல்வழிப்படுத்தும். மன உறுதியுடன் நீங்கள் செயல்படுவீர்கள் இன்று வெற்றி வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். திட்டமிட்ட காரியங்கள் நல்லபடியாகவே முடியும். இன்று கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. இன்று நண்பரின் ஆலோசனைகள் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுக்கும்.
பொறுப்புகள் உங்களுக்கு அதிகமாக இருப்பதால் உழைப்பும் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். கூட்டு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து தகராறுகள் நீங்கி செல்லும்.. இன்று தேவையில்லாத பயணங்கள் மட்டும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் கொஞ்சம் வீண் அலைச்சலும் இருக்கும். நட்பால் உங்களுக்கு நல்ல காரியங்கள் நடைபெறும். விட்டுப்போன சொந்தங்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். தொலைபேசி வழித் தகவல்கள் மகிழ்ச்சி கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்குச் சென்று விடுவீர்கள். இன்று நீங்கள் ஆலய வழிபாட்டையும் மேற்கொள்வீர்கள். ஆனந்தம் கொள்ளும் நாளாகவும் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் கைக்குட்டை எடுத்துக் கொண்டு செல்வது சிறப்பு. அனைத்து காரியங்களும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும். அதே போலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டுடன் இன்று நாளை தொடங்கினால் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்