நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
மேஷ இராசி அன்பர்களே…!! இன்று வீன் பலிகளில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும். வியாபாரம் விருத்தியாக இருக்கும். கொடுக்கல் , வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். நீண்ட பயணத்தால் செலவு கொஞ்சம் கூடும். முக்கிய பணி நிறைவேறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆகும். நலம் விரும்புவோரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் , வியாபாரம் செழிக்க சில மாற்றங்களைச் செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். தகுந்த ஓய்வு உடல்நலம் சீராக்க உதவும். இன்று மனக்குழப்பமும் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.
திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றி பெறும். மாணவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும் , கவனமாக படிப்பது எப்போதுமே நல்லது. எதிலும் எச்சரிக்கை இருக்கட்டும். காரியத்தடை கால தாமததுடனே இன்று நிறைவேறும். இன்று குடும்பத்தில் ஒரு அளவு கலகலப்பு இருக்கும் , சந்தோசம் காணப்படும். இன்று நீங்கள் வெளியில் செல்லும் போது நீல நிற கைக்குட்டையை எடுத்து செல்வது சிறப்பு. உங்களுடைய காரியம் சிறப்பாக நடக்கும். அதேபோல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் முருகனை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 5
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
ரிஷபம் :
ரிஷப ராசி அன்பர்களே….!! இன்று நண்பர்கள் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும். நாடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கற்றவர்களின் பாராட்டுக்களால் உங்களுக்கு கனிவு கூடும். மதிப்பும் , மரியாதையும் உயரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்களுடைய தனித்திறமையை நீங்கள் இன்று நிரூபிப்பீர்கள். உங்களுடைய முயற்சிகள் இன்று வெற்றியை கொடுப்பதாகவே இருக்கும். அதே போல் தொழில் வியாபாரம் செழித்து மனநிறைவையும் உருவாக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் இன்று புத்தாடை , நகை வாங்க கூடும். இன்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் இருக்கும் , அதை பார்த்துக் கொள்ளுங்கள்.
சொன்ன சொல்லை காப்பாற்ற விரும்புவீர்கள். அதனால் மதிப்பும் , மரியாதையும் கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறி எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். அனைவரின் ஆதரவோடு அனைத்து காரியத்தையும் சிறப்பாக செய்வீர்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்போது வெள்ளை நிற கைக்குட்டை அல்லது வெள்ளை நிறத்தாளான ஆடை அணிந்து சென்றால் காரிய வெற்றிக்கு வழிவகுக்கும். அதேபோல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விஷ்ணு பகவானை மனதார நினைத்து வழிபடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.நீங்கள் நினைத்த காரியம் நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்
மிதுனம் :
மிதுன இராசி அன்பர்களே…!! இன்று பதவியில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும் நாளாக இருக்கும். வருமானம் நல்லபடியாகவே உயரும். பயணங்களால் பலன் கிடைக்கும். பக்கபலமாக இருந்த நண்பர்கள் காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். இடையூறு விலகி நன்மை ஏற்படும். பொதுப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் தேடிய பொருள் கையில் வந்து சேரும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப் பிடிப்பார்கள். வியாபாரப் போட்டிகள் குறையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடையோ அல்லது கை குட்டை வைத்துக்கொள்வது சிறப்பாகும். உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். வெற்றியையும் கொடுக்கும். அதே போல இன்று நீங்கள் காலை எழுந்ததும் விஷ்ணு பகவானை மனதார நினைத்து வழிபட்டு தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்
கடகம் :
கடகம் இராசி அன்பர்களே….!! இன்று நண்பர்கள் மூலம் ஆதாயமும் பெறுவீர்கள். பதவியில் உள்ளவர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். தொழில் முன்னேற்றத்திற்கு தொலைபேசி வழித் தகவல் உறுதுணையாக இருக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பணிகளில் அதிக கவனமுடன் செயல் படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு உருவாகும். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள். வாகனங்களில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.
இன்று தடைபட்ட காரியங்கள் தடை நீங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். தேவையான பண உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும் போது சிவப்பு நிற ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து சொல்லுங்கள். நீங்கள் செய்யக்கூடிய காரியமாகவே வெற்றிகரமாக இருக்கும். அதே போல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றிகரமாக இருக்கும் , உங்களுடைய மனம் நிம்மதியாக காணப்படும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் சிவப்பு நிறம்
சிம்மம் :
சிம்ம இராசி அன்பர்களே…!! இன்று தனவரவு திருப்தி தரும் நாளாக இருக்கும். தடைகள் விலகி செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வீடு மாற்றங்கள் விரும்ப தக்க விதத்தில் அமையும். ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தாயின் அன்பும் , ஆசையும் மனதில் ஊக்கத்தை கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அளவு பணிபுரிவீர்கள். உபரி பணவரவு கிடைக்கும். இன்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். தேவையான நிதி உதவியும் கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் , அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். கொடுக்கல் , வாங்கல் விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். இன்று நீங்கள் வெளியே செல்லும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்ந்தோ அல்லது கைக்குட்டையை எடுத்து சென்றால் காரிய வெற்றி கிடைக்கும். அதேபோல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார வழிபட்டு வந்தால் இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி பெறும் நாளாக இருக்கும். சிவபெருமான் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்கினால் உங்களுடைய மனமும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்டமான நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்
கன்னி :
கன்னி இராசி அன்பர்களே…!! இன்று நண்பரோடு ஏற்பட்ட பகை மாறும் நாளாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேக நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டி ஊக்க படுத்துவார்கள். இன்று தொழில் வியாபார வளர்ச்சியில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன் , மனைவி ஒருவரை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.
பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். இன்று மனம் அமைதியாக காணப்பட்டு வெற்றி நடை போடுவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிற கைகுட்டையை எடுத்து செல்வது சிறப்பு. இந்த நிறம் உங்களுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும். அதே போல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்டமான எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்
துலாம் :
துலாம் இராசி அன்பர்களே…!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். புகழ் மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பார்கள். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு ஆச்சரியப்பட வைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொந்தப் பிரச்சினை பற்றி பிறரிடம் பேச வேண்டாம். கூடுதல் உழைப்பு தொழிலில் இருக்கும் , வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி மாற்றத்தை இன்று உருவாக்கும். பணவரவை விட புதிய இனங்களில் செலவு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. இன்று காரியத்தடை தாமதமாகவே ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதும் , கவனமாக அதை செயல்படுத்தும் நல்லது. குடும்ப பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் மட்டும் வேண்டாம்.
இன்று பொருளாதார சிக்கல்கள் ஓரளவு ஏற்பட்டு ஓரளவு நீங்கும். இன்றைய நாள் நீங்கள் ஓரளவு மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடையக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை கைக்குட்டைய எடுத்து சென்றால் காரிய வெற்றி ஏற்படும். உங்களுடைய மனமும் நிம்மதியாகவே காணப்படும். அதேபோல இன்று காலையில் எழுந்ததும் முருகன் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய முருகன் வழிபாடு இன்றைய நாளுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசையாக : வடக்கு
அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
விருச்சிகம் :
விருச்சக ராசி அன்பர்களே…!! இன்று நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும். பிள்ளைகள் நலன் கருதி சேமிக்கக் கூடிய எண்ணம் உருவாகும். இடம் , பூமி வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். இடையூறு செய்தவர்களை அடையாளம் காண்பீர்கள். புதிய முயற்சி ஓரளவு நன்மை கொடுக்கும். தொழில் வியாபாரம் தாமத கதியிலே இருக்கும். மிதமான அளவில் தான் பண வரவு கிடைக்கும். தியானம் , தெய்வ வழிபாடு மனம் அமைதி பெறுவதற்கு உதவும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் , திட்டமிட்டதை விட கூடுதல் செலவு இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறுவது படி நடந்துகொள்வது நன்மை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு வந்து சேரும். இன்று ஓரளவே மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அணிந்து செல்லுங்கள். இல்லையேல் வெள்ளை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். இதனால் காரியங்கள் வெற்றிகரமாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும் , நீங்களும் மகிழ்ச்சியாகவே காணப்படுகிறார்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறம்
தனுசு :
தனுஷ் ராசி அன்பர்களே…!! இன்று தேசப்பற்றும் , தெய்வப் பற்றும் மேலோங்கும் நாளாக இருக்கும் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி கிட்டும். மனதில் கூடுதல் தைரியம் ஏற்படும். எதிர்பார்ப்புகளை சாதுரியமாக்கி இன்று வெல்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாகவே நிறைவேறும். நிலுவைப்பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டியும் இருக்கும் , பார்த்துக்கொள்ளுங்கள்.
மற்றவர்களுக்கு வழியே சென்று உதவுவதால் வீண் விரோதம் போன்றவை ஏற்படும் , கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பச்சைநிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்வது சிறப்பு. இதனால் உங்களின் வாய்ப்புகள் தேடி வரும் . அதேபோல நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்
மகரம் :
மகர ராசி அன்பர்களே…!! இன்று அமைதி கூடும் , ஆலயம் சென்று வழிபட வேண்டிய நிலைமை இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பயணத்தின் போது கூடுதல் கவனம் ஏற்படும். நட்பு பகையாக கூடும். பேசும்போது கவனம் இருக்கட்டும்.வீண் விரயம் கொஞ்சம் உண்டாகும். உறவினரின் பேச்சை தொந்தரவாக கருதுவீர்கள். இன்று தொழில் , வியாபாரம் முன்னேற்றம் பெற புதிய வழி வகைகளை சிந்திப்பீர்கள். கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு , சிறு பிரச்சினைகள் உண்டாக கூடும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் , வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் இருக்கட்டும்.
இன்று கணவன் , மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் மாறும். இன்று ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை சந்திக்கக்கூடும். இன்று நீங்கள் முன்னேற்றமான காரியங்களில் ஈடுபடும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிற கைக்குட்டை எடுத்துச் செல்வது அந்த காரியம் எளிதாக நிறைவேறும். அதுபோலவே காலையில் எழுந்ததும் மனதார மகாலட்சுமியை வழிபட்டு இன்று தொடங்கும் பட்சத்தில் அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு
அதிஷ்டமான எண் : 2 மற்றும் 6
அதிஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
கும்பம் :
கும்ப ராசி அன்பர்களே…!! இன்று கடின வேலைகளை கூட எளிதில் முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். சமுதாய பணிகளில் ஆர்வம் கூடும். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நிலையான வருமானத்திற்கு வழி கிடைக்கும். புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். ஒதுக்கி வைத்த பணியை நிறைவேற்றி தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகி செல்லும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று விருந்து விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். ஒருமுறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை கொடுக்கும். பணவரவு இருமடங்காக இருக்கும். வீண் செலவும் இருக்கும் , பார்த்துக் கொள்ளுங்கள்.
சொத்துக்கள் வாங்குவது , விற்பது ஆகட்டும் , பயணங்களின் போதும் , வாகனங்களில் செல்லும் போதும் , எச்சரிக்கை இருக்கட்டும். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை செய்யும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் கைக்குட்டையை எடுத்து சொல்லுங்கள். காரிய வெற்றி கிடைக்கும் அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும். நீங்களும் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்
மீனம் :
மீனம் இராசி அன்பர்களே….!! இன்று இடமாற்ற சிந்தனைகளால் உங்களுக்கு மனம் ஓரளவு அலைபாய கூடும். திடீர் பயணங்களால் தித்திக்கும் செய்தி வந்து சேரும். பிரியமான நண்பரின் சந்திப்பு ஒருவரால் பிரச்சனை தீரும். தொழில் போட்டிகளை இன்று சமாளிப்பீர்கள். போட்டி பந்தயத்தில் ஈடுபடவேண்டாம். தொழிலில் உள்ள குளறுபடியை சரி செய்வதால், ஓரளவு வளர்ச்சி கிடைக்கும். அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் , மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படும்.
பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுவது நன்மையை கொடுக்கும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டும்.இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது பச்சை நிற ஆடைகள் அணிந்து செல்லுங்கள் அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டை எடுத்து செல்லுங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதில் உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மயில் நீல நிறம்