சீரியல் நடிகை நீலிமாவுக்கும், அவரது கணவருக்கும் 12 வயது வித்தியாசம் உள்ளதாம். இதில் ஒன்பது வருடங்கள் கழித்து அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டார்களாம்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் வில்லியாக வலம் வருபவர் நடிகை நீலிமா. இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சிறுவயதிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்ட நீலிமாவுக்கு தற்போது அழகான பெண் குழந்தை உள்ளது. இவருக்கும் இவரது கணவரும் 12 வயது வித்தியாசம். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், நீலிமா தெலுங்கு, அவரது கணவர் தமிழ், நீலிமா தான் தனது காதலை முதலில் கூறினாராம்.
21 வயதிலேயே திருமணமாகி பல ஆண்டுகளாகியும் காதல் மட்டும் துளி கூட குறையவில்லை. திருமணம் ஆனவுடன் குழந்தை வேண்டாம் என்று கூறிய நீலிமா ஒன்பது ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொண்டாராம். இந்த ஜோடிக்கு திருமணம் ஆன உடனே நீலிமாவின் தந்தை இறந்துவிட்டார். அவரின் தம்பி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். தம்பி கல்லூரி படிப்பை முடித்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நீலிமா கூறியிருந்தால் அதை கணவனும் ஏற்றுக்கொண்டார். இந்த காரணத்தினால் அவர்களுக்கு ஒன்பது வருடங்கள் கழித்து தான் பெண் குழந்தை பிறந்தது.