பிரிட்டனில் கடந்த வாரம் 12 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்திலுள்ள லிவர்பூல் நகரில் கடந்த வியாழக்கிழமை அன்று, Christmas lights switch on என்ற நிகழ்வு நடைபெற்றது. அதில், ஏவா ஒயிட் என்ற 12 வயது சிறுமி பங்கேற்றார். அப்போது திடீரென்று, சிறுமி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். பலத்த காயங்களுடன் போராடி சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினரின் விசாரணையில், ஏவா ஒயிட் அந்த நிகழ்ச்சியில், அவரது நண்பர்களோடு பங்கேற்றது தெரியவந்தது. மேலும், இது தொடர்பில் 4 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதில், ஒரு சிறுவன் மீது கொலை குற்றச்சாட்டு மற்றும் பயங்கர ஆயுதத்தை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அச்சிறுவனை இன்று நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்ப்படுத்த இருக்கிறார்கள். மேலும் கைது செய்யப்பட்டிருந்த, மூன்று சிறுவர்களை ஜாமீனில் விடுவித்துள்ளனர். இது தொடர்பில் சூ கூம்ப்ஸ் என்ற துப்பறியும் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளதாவது, சிறுமியின் குடும்பத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறோம்.
இந்த கடினமான சூழலில் அவர்களது தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சம்பவத்தின் போது, அதனை புகைப்படம் எடுத்தவர்கள் அல்லது நேரில் பார்த்தவர்கள், தங்களுக்கு தெரிந்த தகவல்களை https://mipp.police.uk/operation/05MP21M43-PO1 என்ற முகவரிக்கு அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளார்.