Categories
உலக செய்திகள்

12 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி.. ஆஸ்திரேலியா அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியாவில் 12லிருந்து 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர்/பயோஎன்டெக்  தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் தற்போது வரை 16 வயதிற்கு அதிகமான நபர்களுக்கு தான் பைசர்/பயோஎன்டெக் தடுப்பூசிகள் செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது நாட்டிலுள்ள மூன்று மாநிலங்கள் டெல்ட்டா வகை வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சரான, கிரெக் ஹன்ட் இது தொடர்பில் அறிவித்திருப்பதாவது, உள்ளூர் மற்றும் பிற நாடுகளில் தீவிரமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்பு தான் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் சில வாரங்களுக்கு முன்பாக, இதே போல சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |