டெல்லியில் உள்ள ஒரு மசூதியில் தண்ணீர் பிடிக்க சென்ற 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் 12 வயது சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக மசூதிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு மதகுருவாக இருந்த 48 வயதான மௌலி அலி என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த சிறுமி எவ்வளவு கெஞ்சியும் அவர் விடவில்லை. பின்னர் வீட்டிற்கு சென்று சிறுமி நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது பெற்றோர்கள் இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பிறகு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானது தெரியவந்ததை அடுத்து கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் மசூதிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.