Categories
தேசிய செய்திகள்

120 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை… இயக்கி வந்த பெண்கள் குழு… வைரல் வீடியோ..!!

120 டன் மெட்ரிக் ஆக்சிஜனை ஏற்றி வந்த ரயிலை பெண் குழுவினர் இயக்கி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

120 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்ட ரயிலை பெண்கள் குழு ஒன்று இயக்கி வந்தது. இதுதொடர்பான வீடியோவை ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “7வது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஜாம்ஷெட்பூர் டாடா நகரில் இருந்து பெங்களூருக்கு வந்தடைந்தது. எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய பெண் குழு தொடர்ந்து மாநிலத்தில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

கர்நாடக மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் தொற்று அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அங்கு 1200 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. அம்மாநில அரசு மத்திய அரசிடம் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஆக்சிஜன் ஏற்றி வந்த ரயில் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கப்பட்டது.

Categories

Tech |