மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் மனதில் அச்சம் அதிகரித்துள்ளது.
உலக நாடுகளில் பரவி வரும் கொடிய வைரஸான கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. இதனைதொடர்ந்து கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இருந்தும் இந்தியாவில் 4281 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 120 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கொரோனா தோற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 868 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரே நாளில் 7 பேர் மரணமடைந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மனதில் அச்சமும் அதிகரித்து வருகிறது.