Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட…. “பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு”… வழிபட்டுவரும் கிராம மக்கள்…!!

கூவாகம் கிராமத்தில் பல்லவர் கால சிற்பங்களை  வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில்  கூவாகம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஐந்தாம் தேதி முதல் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூவாகம் ஏரிக்கரை பகுதியில் விழுப்புரம் அருங்காட்சியகம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், கண.சரவணகுமார், விஷ்ணுபிரசாத் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டபோது  அங்கு வழிபட்டு வரும் கொற்றவை, மூத்த தேவி சிற்பங்களை அவர்கள் ஆய்வு செய்து பார்த்தனர்.

அப்போது அதைப் பற்றி அவர்கள் கூறியதாவது, கூவாகம் ஏரிக்கரை பகுதியில் திறந்தவெளியில் கொற்றவை சிற்பம் உள்ளது. இந்த கொற்றவை தெய்வத்தை இப்பகுதி மக்கள் காளி என்று அழைக்கிறார்கள். இந்த ஏரிக்கரை பகுதியில் நடைபெறும் அரவாண், களப்பலி, பலி சாதம் படைத்தல் அரவான் மீண்டும் உயிர்ப்பித்தல் நிகழ்வுகள் அனைத்தும் காளியை மையப்படுத்தி செய்கின்றனர். கூவாகம் கிராமத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன் கொற்றவைக்கு தன்னைத்தானே பலிகொடுத்த வீரனை வழிபட்டனர்.

ஆனால் காலப்போக்கில் இந்த வழிபாடு கூத்தாண்டவர் வழிபாடாக மாற்றம் பெற்றுள்ளது. மேலும் கொற்றவை சிற்பத்தின் அருகில் மூத்த தேவி அமர்ந்துள்ள நிலையில் மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோருடன் காட்சியளிக்கிறாள். இந்த சிற்பங்கள் 1200 வருடங்களுக்கு முன் பல்லவர் காலத்தில் உள்ளவை. இன்று வரை கூவாகம் கிராம பொதுமக்கள் இந்த சிற்பங்களை பாதுகாத்து வழிபட்டு வருகின்றனர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |