Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் 1,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு… கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் தப்பியோட்டம்..!

புதுக்கோட்டை அருகே மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் 1,200 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், மது கடைகள் ஆகியவை மூடப்பட்டன.

இதையடுத்து, மது கிடைக்காமல் பல்வேறு மதுபிரியர்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும், கருப்பு சந்தையில் பலர் மது வாங்கி குடிப்பது வழக்கமாகி வந்தது. மேலும் இந்த காலகட்டத்தை பயன்படுத்தி கள்ளச்சாராய விற்பனையும் அமோகமாக நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் வகையில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை கள்ளச்சாராயம் காய்ச்சியதாகவும், விற்றதாகவும் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் சாராய ஊறல் வைப்பது வழக்கமாகி வந்துள்ளது. இந்த நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராய ஊறல் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான குழு மற்றும் காவல்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் அரவம்பட்டியில் காட்டுப்பகுதியில் சுமார் 1,200 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டது. போலீசார் வருகையை அறிந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர். அந்த ஊறலில் காய்ந்த மிளகாய்களை கொண்டு சாராயம் தயாரிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். 10,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |