Categories
உலக செய்திகள்

“12,000 வருட மர்மம்” ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்த சம்பவம்….. என்ன‌ நடந்தது தெரியுமா…?

துருக்கியே நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சுமேரியர்கள், ஆரியர்கள், ரோமானியர்கள் உட்பட 25 நாகரிகங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெங்குளு டல்லா என்ற பகுதியில் கடந்த 10 வருடங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு முன்னதாக அரசு கட்டிடங்கள், ஒரு லட்சம் பாசிமணிகள், 130 மனிதர்களின் எலும்புக்கூடுகள், வீடுகள் போன்றவைகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது புதிதாக ஒரு கட்டிடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது சுமார் 12,000 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை தான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த அடுக்குமாடி கட்டிடம் மூன்று மாடிகளாக இருக்கிறது. இன்றைய வளர்ந்து வரும் காலகட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு நாகரிகமே பல வருடங்களுக்கு முன்பாக தான் வந்த நிலையில் 12 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே அடுக்குமாடி குடியிருப்பு இருந்தது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சி பணியில் 15 பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளனர். மேலும் மேற்கண்ட தகவலை தொல்லியல் துறை பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் எர்குல் கோடா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |