ரஷ்யா, உக்ரைனில் தொடர்ந்து 14-ஆம் நாளாக போர் தொடுத்து வருவதால் தற்போது வரை ரஷ்ய வீரர்கள் 12000 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள், தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில் உக்ரைன் படைகளும் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் போர் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை ரஷ்ய படைகளை சேர்ந்த வீரர்கள் 12,000 பேர் பலியானதாக உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது.
மேலும், ரஷ்யாவின் 80 ஹெலிகாப்டர்கள், 303 பீரங்கிகள், 48 ராணுவ விமானங்கள், 400க்கும் அதிகமான ராணுவ வாகனங்கள், 1036 பாதுகாப்பு கவச உடைகள், பல்வேறு திசைகளில் இருந்து குண்டு வீசக்கூடிய 56 கருவிகள் அழிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது.