தென்னிந்தியாவில் 121 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஜனவரி மாதம் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு நாட்டில் 62 ஆண்டுகள் இல்லாத வகையில் ஜனவரியில் அதிக அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென்னிந்தியாவில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 21 ஆண்டுகளில் 22.33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் பதிவாகியுள்ளது.
கடந்த 1950 ஆம் ஆண்டு 22.11 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு 22. 93 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத வகையில் 1982ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு 14.52 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. 1958ம் ஆண்டில் 121 ஆண்டுகளில் இல்லாத வகையில் 15.06 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என அறிவித்து உள்ளது.