பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வித்தியாசமான முறையில் மணல் சிற்பமாக செதுக்கியுள்ளார் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக். அதன்படி இவர் 1,213 தேநீர் கோப்பைகளை நிறுவி ஹாப்பி பர்த்டே மோடி ஜி என்ற வாழ்த்துடன் மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது: “பிரதமர் மோடியின் தேநீர் விற்பனையாளர் முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணத்தை காட்ட மண் தேநீர் கோப்பைகளை பயன்படுத்தி சிற்பம் உருவாக்கினேன். இங்கே எனது கலையின் மூலம் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்” என்று அவர் கூறினார் .