Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…. வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்…. மே 10ஆம் தேதிக்குள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக, 1968-ம் ஆண்டு தேசிய வாழ்வாதார சேவை மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தொழில் கல்வி பயிற்றுவித்தல், தொழில் வழிகாட்டல், ஆலோசனை வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த மையத்தின் சார்பில் சென்னையில் வேலை வாய்ப்பு முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், சென்னையை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது.பயிற்சிக்கு விண்ணப்பிக்க பிகாம், பிஏ,பிசிஏ,  தேர்வு பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு 28க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை மே 10ஆம் தேதி காலை 11 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-24615112/8248962842 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |