Categories
பல்சுவை

“124 வருடங்களாக” சிறைப்பிடிக்கப்பட்ட மரம்…. என்ன குற்றமாக இருக்கும்….!!!

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் குற்றம் செய்தால் ஒரு மனிதரைத் தான் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் ஒரு மரத்தை 124 வருடங்களாக கைது செய்து வைத்துள்ளனர் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம். கடந்த 1898-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றது. அப்போது ஆங்கிலேய அரசின் உயர் காவல்துறை அதிகாரியாக ஜேம்ஸ் ஸ்குவிட் என்பவர் பணியாற்றினார். இவர் மது அருந்திவிட்டு தன்னுடைய வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வழியில் நின்ற ஒரு மரத்தை வழி விடுமாறு கூறி உள்ளார்.

அது ஒரு மரம். அது எப்படி அந்த இடத்தை விட்டு நகரும். ஆனால் மது போதையில் இருந்த ஆங்கிலேய அதிகாரி தனக்கு வழி விட மறுத்த குற்றத்திற்காக மரத்தை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக அந்த மரத்தை ஒரு சங்கிலியால் கட்டி கைது செய்துள்ளனர். அந்த சம்பவம் நடந்து சரியாக 65 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. மேலும் சுதந்திரம் கிடைத்தாலும் கூட அந்த மரத்தில் இருக்கும் சங்கிலியை இதுவரை அவிழ்க்காமல் அப்படியே வைத்துள்ளனர்.

Categories

Tech |