அமெரிக்காவில் 120 கூண்டுகளில் பயங்கர விஷத்தன்மை கொண்ட பாம்புகளை தன் குடியிருப்பில் வளர்த்த நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
அமெரிக்காவில் இருக்கும் Pomfret என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 49 வயதுடைய David Riston என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று இரவு நேரத்தில் அவரின் பக்கத்து வீட்டில் இருப்பவர் david-ஐ முதல் நாள் பார்க்கவில்லை. எனவே, அவரை காண சென்றிருக்கிறார். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டிற்குள் David பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். எனவே, உடனடியாக காவல்துறையினருக்கு தொடர்பு கொண்டிருக்கிறார். அதன்பின்பு, காவல்துறையினரும் அக்கம்பக்கத்தினரும் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். அதாவது அவரின் வீட்டிற்குள் 125 கூண்டிற்குள் பலவிதமான பாம்புகள் இருந்திருக்கிறது.
அவற்றை டேவிட் வளர்த்து வந்திருக்கிறார். அதில் எதிரில் நிற்பவர்களின் கண்களில் விஷத்தை கக்கும் spitting cobra, அதிக விஷம் கொண்ட black mamba போன்ற பல வகையான பாம்புகள் இருந்திருக்கிறது. இந்த பாம்புகளை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம். இந்நிலையில் டேவிட் எவ்வாறு உயிரிழந்தார்? என்பது மர்மமாகவே இருக்கிறது.
எனினும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் டேவிட் இவ்வாறு ஒரு பாம்பு பண்ணையையே வீட்டில் வைத்திருப்பது தங்களுக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார்கள்.