திருமணம் முடிந்தவுடன் மாமியார்கள் மருமகனுக்கு விதவிதமாக சமைத்து விருந்து படைப்பது வழக்கம். ஏனெனில் தங்கள் வீட்டில் மகள் இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டு தான் வந்துள்ளார்கள் என்பதை மருமகனுக்கு உணர்த்தவே அவ்வாறு செய்வார்கள். இதை புரிந்துகொண்டு புகுந்த வீட்டில் தனது மகளுக்கு இதே போன்ற உணவு அளிப்பார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் தற்போது பலரும் நூற்றுக்கணக்கில் உணவுகளை சமைத்து மருமகனுக்கு வழங்கி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் மாமியார் ஒருவர் தனது மருமகனுக்கு 125 வகை உணவுகளை சமைத்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு முன்பாக ஆந்திராவில் மாமியார் ஒருவர் 67 வகையில் சமையல் செய்து அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Dinner with 125 varieties of food for the new son-in-law in Bhimavaram of
Godavari district #AndhraPradesh pic.twitter.com/nKkDiVCIhD— Sudhakar Udumula (@sudhakarudumula) January 20, 2021