இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு வந்த 125 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில், ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட பிறகு, உலக நாடுகளில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதில், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது.
எனவே, அங்கு கடும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தாலி நாட்டிலிருந்து, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரத்திற்கு வந்த 125 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் சுமார் 179 பயணிகள் வந்திருக்கிறார்கள். அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதன்பிறகு, கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களை மட்டும் தனிமைப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.