தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணைய இணைப்பு வழங்குவதற்கான பாரத் நெட் திட்டத்தின் 2 ஆம் கட்ட பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்குவதற்கு 1,815 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் எல்-டி மற்றும் பிஇசிஐஎல் நிறுவனம் அதிகாரிகள் கிராமங்களுக்கு இணைய வசதி வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.