கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக தன் நாட்டு மக்களுக்கு வழங்கப்போவதாக ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது நிவர், புரெவி என வகைவகையான புயல்கள் வந்து தமிழகத்தையே புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் ஜப்பான் அரசு, அந்நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வகையிலான புதிய சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இந்த புதிய சட்டத்தின்படி 126 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளது. இதற்காக அமெரிக்க நிறுவனமான பைசரிலிருந்து 60 மில்லியன் மக்களுக்கும் மற்றும் பயோடெக் நிறுவனமான மாடர்னாவிலிருந்து 2 மில்லியன் மக்களுக்கும் தடுப்பூசி மருந்துகளை ஜப்பான் பெற்றுள்ளது. மேலும் 120 மில்லியன் டோஸ் ஆஸ்ட்ராசென்கா நிறுவனத்திடமிருந்து தடுப்புமருந்தை பெறவும் ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.