குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் அதிக அளவிலான வைரக்கற்களை வைத்து மோதிரம் ஒன்றை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்
குஜராத் மாநிலம் சூரத் நகரில் ரெனானி என்ற பெயரில் நகைக் கடை ஒன்றை நடத்தி வருபவர் ஹரீஷ் பன்சால். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சூரத்தில் நகை வடிவமைப்பு பற்றி படித்துக் கொண்டிருக்கும் போதே உலக சாதனை படைக்க விரும்பியுள்ளார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைரங்கள் வைத்துத்தான் இந்த உலக சாதனையை படைக்க வேண்டும் என்பதே இவரின் இலக்காக இருந்துள்ளது.
இந்நிலையில் 12 ஆயிரத்து 638 வைரக் கற்கள் பதித்து ஒரு அழகிய மலர் வடிவ மோதிரத்தை உருவாக்கி, தான் நினைத்தது போலவே கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தான் தயாரித்த எட்டு அடுக்கு மலர் வடிவமைப்பில் உள்ள மோதிரத்தின் ஒவ்வொரு சிறிய இதழும் தனித்துவமானது என கூறும் ஹரீஷ், இந்த மோதிரத்தின் விலையை குறிப்பிடாமலேயே, அதனை விற்கும் எண்ணமில்லை என தெரிவித்துள்ளார். மேலும்,” இது எங்களுக்கு பெருமை அளிக்ககூடிய விஷயம். இது விலைமதிப்பற்றது” என்று கூறினார்
இதற்கு முன்னதாக 7,801 வைரங்களை வைத்து தயாரிக்கப்பட்ட வைரமே கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.