Categories
தேசிய செய்திகள்

என்ன துணிச்சல்டா உனக்கு….. “பெரியவர்களே திணறும் காரியம்” 12 வயது சிறுவனுக்கு குவியும் பாராட்டு….!!

வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை துணிச்சலுடன்  காப்பாற்றிய 2 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

சில நாட்களாக வடமாநிலப் பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெள்ளத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

பின் அவர் செய்வதறியாது கதற, சத்தம் கேட்டு பார்த்த 12 வயது சிறுவன் ஒருவன் ஆற்றில்  துணிச்சலாக குறித்து கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் போராடி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபரை தேடி கண்டுபிடித்து காப்பாற்றியுள்ளான்.  சிறுவனின் இந்த துணிச்சலான செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Categories

Tech |