Categories
மாநில செய்திகள்

முழு லாக்டவுன், மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்?…. முதல்வர் ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் திருப்புதல் தேர்வு ஜனவரி 31-ம் தேதிக்கு பின் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதற்கு முன்பாக கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் முதல்வர் முக.ஸ்டாலின் திருவள்ளூருக்கு சென்றுவிட்டு சென்னைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த மாணவர்கள், அய்யா 12th ஆல்பாஸ் பண்ணி விடுங்கள் என்றும் லாக்டவுன் போடுங்கய்யா என்றும் ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல் ஊரடங்கின்போது அன்றைய முதல்வர் பழனிச்சாமியிடம் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ், வலிமை அப்டேட் கேட்டது பெரும் வைரலான நிலையில், தற்போது ஸ்டாலினிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Categories

Tech |