Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… குற்றவாளி தலைமறைவு… சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லை குடுத்து தலைமறைவான நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வாசலூர்பட்டி அருகே பெரியசாமிபட்டியை 16  வயதான சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் 12ஆம் வகுப்பு படிக்கும் நிலையில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு அருகில் செல்போன் சிக்னல் கிடைக்காத நிலையில் கிடைக்காததால் அருகிலுள்ள மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற 23 வயதான இளைஞர் அச்சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனைஅறிந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவான அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் தேடி வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வாசலூர்பட்டியில் ஒரு  திருமணத்திற்கு கார்த்திக் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் வைத்து  போலீசார் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். மேலும்  நாமக்கல் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பரமத்தி கிளை சிறை சாலையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |