மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆலப்பாக்கம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜன் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் தந்தை திட்டுவாரோ என்ற அச்சத்தில் இருந்த ராஜன் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த ராஜனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராஜன் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.