தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வட கோவனூர் பகுதியில் அமைந்துள்ள அரசு கொள்முதல் நிலையத்தை சுற்றியும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த கொள்முதல் நிலையம் 13 ஆண்டுகளாக திறந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் வடகோவனுர் பகுதியை சுற்றியுள்ள சித்தாம்பூர், தெற்கு படுகை ,பாண்டுகுடி, லட்சுமாங்குடி, குடிதாங்கி சேரி போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பயிர்களை விற்பனைக்காக இங்கு சேமித்து வைத்துள்ளனர்.
மேலும் இந்த கொள்முதல் நிலையம் 13 ஆண்டுகளாக திறந்த நிலையில் உள்ளதால் மழைநீர் உள்ளே புகுந்து நெற்பயிர்கள் வீணாகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.