Categories
உலக செய்திகள்

13 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்…. தாயை தூக்கில் போட்ட மகள்…. கொடூரமான இஸ்லாமிய சட்டம்…!!

ஈரானில் பெண்ணுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை பெற்ற மகளே நிறைவேற்றிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானை சேர்ந்தவர் மரியம் கரிமி. இவரது குழந்தைக்கு 6 வயது இருக்கும் போது மரியம் கரிமி அவரது கணவரை கொலை செய்துள்ளார். இதனால் ஈரான் நீதிமன்றம் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதன் பின்னர் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் மரியம் கரிமிக்கு கடந்த வாரம் சிறைத் தண்டனை முடிந்துள்ளது.

இதனையடுத்து அவருக்கு வழங்க வேண்டிய மரண தண்டனையை மரியம் கரிமியின் மகளே நிறைவேற்றியுள்ளார். அதாவது ஈரானில் இஸ்லாமிய சட்டத்தின்படி கணவரை கொள்ளும் மனைவிகளுக்கு தண்டனை வழங்கும் முழு அதிகாரமும் மகளுக்கு உண்டு என்பதன் அடிப்படையில் இந்த மரண தண்டனையை மரியம் கரிமியின் மகளை நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |