தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வருகிற சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவிற்கு 13 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க இயலும் என்று அதிமுக திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளது. 9 தொகுதிகளில் பேச்சுவார்த்தை ஆரம்பித்து, தற்போது 13 தொகுதிகள் வரை கொடுக்க முன்வந்துள்ள அதிமுக, 13 தொகுதிகளுக்கு மேல் ஒரு சீட் கூட தரமுடியாது என்று கறாராக கூறி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது